பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

sdsd

Seven-new-Earth-sized-exoplanets-foundFrom-Seema-Hakhuவரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது. புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்த கோள்களில் வாழக் கூடிய தன்மைகள் இருப்பது மேலும் ஆய்வுகள் நடத்தி பின்பு தான் உறுதியாக தெரிவிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment