பல கொலைகளுக்குப் பயன்படுத்திய மர்ம வாகனம் அடையாளம் காணப்பட்டது!

Facebook Cover V02

1-4கொலைகள் உள்ளிட்ட பல மோசடி வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தேடச்சொன்னதாகக் கூறப்படும் வாகனமொன்றை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் இன்று ஊடகங்களுக்கு வெளிக்காட்டியுள்ளனர்.

குறித்த வாகனம் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வசம் இருந்ததாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உடனே மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு அழைப்பெடுத்த அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஜிஈ2034 என்ற தகடுள்ள வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ளதா எனவும் வினவினார். அதற்கு அந்த அதிகாரி குறித்த வாகனம் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆனந்த அளுத்கமகே இந்த வாகனமானது கொலை, கொள்ளை மற்றும் ஊழல் மோசடி போன்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இது குறித்து நாவலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய காவல்துறை நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலக்கத் தகடு கொண்ட வாகனத்தை தேடும் படி காவல்துறையினருக்கு நீதிமன்றத்தால் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Post

Post Comment