ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் 3 மாதங்களுக்கு நீடிக்க கோரிக்கை:

ekuruvi-aiya8-X3

Raviraj2தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் 3 மாதங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிணைச் சட்டத்தின் 17ம் சரத்தின் அடிப்படையில் இவ்வாறு விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றில் இவ்வாறு விளக்க மறியல் காலத்தை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை குறித்து எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றம் பரிசீலனை செய்ய உள்ளது.

Share This Post

Post Comment