கொக்குவிலில் காவல்துறையை வெட்டியது முன்னாள் புலி உறுப்பினர் – பூஜித ஜெயசுந்தர!

ekuruvi-aiya8-X3

poojithகாவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் புலி உறுப்பினர் எனவும், தற்போது அவர் ஆவாக் குழுவுடன் இணைந்து இயங்கி வருவதாக சிறிலங்காக் காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்குவருகை தந்த பூஜித ஜெயசுந்தர காயமடைந்த காவல்துறையினரைப் பார்வையிட்டதுடன், ஊடகசந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். அதிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கருகில் நேற்று காவல்துறையினர் மீது 10பேர் கொண்ட குழுவொன்று உந்துருளியில் பயணித்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடத்தியவர் முன்னாள் புலி உறுப்பினர் எனவும், அவர் தற்போது ஆவா குழுவுடன் இணைந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment