யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்

Facebook Cover V02

gun4445யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் உள்ள ஓர் வீட்டின் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் முச்சக்கர வன்டியில் வந்தவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டின் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளமையினால் உயிரிழப்புக்கள் ஏதும் இடம்பெறாத போதிலும் குறித்த சம்பவத்தினையடுத்து பிரதேசத்தில் மீண்டும் பதற்றம் நிலவுன்றது.

மேற்படி சம்பவம் மொடல்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முறையிடப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபடுவதோடு ஓர் கைத் துப்பாக்கியின் வெற்றுத் தோட்டா ஒன்றினையும் அதன் சன்னத்மினையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கையில் ,

எமது வீட்டின் 20 வயது இளைஞன் ஒருவருக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக வால் வெட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஓர் வழக்கு அச்சுவேலிப் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் இடம் பெறும் வழக்கினை எதிர்கொள்கின்றோம்.

இந்த நிலையில் புதன் கிழமை மாலை 5.45 அளவில் வீட்டிற்கு வாகனத்தில் வந்த பொலிசார் சிலர் வீட்டிற்குள் வந்து கதவினைத் திறக்குமாறு கோரியபோது வீட்டில் 14 வயதுச் சிறுமியும் அவரது சகோதர்ரான சிறுவர்களுமே வீட்டில் இருந்தனர்.

அப்போது கதவை திறக்குமாறு கோரியபோது சிறுவர்கள் பெற்றோர் இல்லை எனக் கூறியபோதும் கதவை பலமாக தட்டியமையினால் சிறுவ ர் கள் கதவைத் திறந்தபோது வீட்டின் அலுமாரிகள் அனைத்தும் தேடி ஓர் அல்பத்தில் இருந்து ஓர் படத்தினை எடுத்துக் கொண்ட பொலிசார் அல்பத்தினையும் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

அவ்வாறு செல்லும்போது நாளை அண்ணா சுடப்பட்டு பினமாக கிடப்பார் எடுங்கள் எனக் கூறியுள்ளதோடு வாகனத்தில் ஏறி செல்லும்போது கைத்துப்பாக்கியினை எடுத்து காட்டிவிட்டே சென்றுள்ளனர்.

இவற்றினை அடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத சிலர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனவே இதனை பொலிசாரே மேற்கொண்டிருக்க வேண்டும் என நாம் சந்தேகிப்பதாகவும் வீட்டார். தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார் வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் பொலிசார் தொடர்பில் இது வரை சரியான தகவல்கள் ஏதும் உறுதிப்படுத்தவில்லை. அத்துடன் வந்தது பொலிசாராயின் எந்த நிலையப் பொலிசார் என்பன கண்டறியப்படவில்லை என வீட்டாரிடம் பதிலளித்தனர்

Share This Post

Post Comment