கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா திருமணம் நடைபெறும்!

Thermo-Care-Heating

ram sarmilaமனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தகிதி கொடைக்கானலில் நடைபெற உள்ளது.

மதுரையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இரோம் ஷர்மிளா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைத் தெரிவித்தார். திருமணம் என்பது தனது தனிப்பட்ட விவகாரம் எனவும் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

தன்னுடைய திருமணத்திற்கான மூன்று சாட்சிகள் மிரட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “ஆகஸ்ட் 16 ஆம் தகிதி கொடைக்கானலில் எனது திருமணம் நடைபெறும். கொடைக்கானலிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன், தொடர்ந்து மனித உரிமைக்காக போராடுவேன்” எனவும் ஷர்மிளா கூறினார்.

மேலும், “அம்பேத்கரின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை இந்தியா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய திவ்யபாரதிமீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிப்பேன்” என்று இரோம் ஷர்மிளா கூறினார்.

ideal-image

Share This Post

Post Comment