கோடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

ekuruvi-aiya8-X3

koda_naduகோடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார். அவரை நீலகிரி கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் மூலம் உதவிய ஒருவரை கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியில் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவலாளி கொலை வழக்கில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், கேரளாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை போலீசார் நீலகிரி கொண்டு வந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக, கூடலூரில் சிலருக்கு தொடர்பு உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து எஸ்.பி., தலைமையிலான தனிப்படையினர் கூடலூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment