மாவை சேனாதிராஜாவின் தாயாரின் இறுதி கிரியைகள் இன்று!

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தாயார் சோமசுந்தரம் தையல் பிள்ளை அவர்களின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன.

கடந்த 18ஆம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் தனது 98ஆவது வயதில் அவர் காலமானார்.

1919.07.15ஆம் திகதி மாவிட்டபுரத்தைச்சேர்ந்த காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது மகளாக பிறந்து அதே மண்ணைச்சேர்ந்த சோமசுந்தரம் அவர்களை கரம்பிடித்து ஏழு பிள்ளைகளின் தாயாக இல்லற வாழ்வை இனிதே நடத்தினார்.

தமிழீழ விடுதலை வரலாற்றில் எம் தமிழ் போராளிகளை அணைத்த பெருமைக்குரியவர் தையலநாயகி சோமசுந்தரம் என அனைவராளும் புகழப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.

ஈழத்தமிழரின் இன்றைய காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவராகப் பணியாற்றும் மாவை சேனாதிராஜா அவர்களை இன விடுதலை தந்த பெருமைக்குரிய அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், பல அரசியல் தலைவர்கள்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

mavai_mother_001-450x253 mavai_mother_002-450x253 mavai_mother_003-450x253 mavai_mother_004-450x253 mavai_mother_005-450x253


Related News

 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *