வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்?

kim_jangவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதித்தது.

இதேபோல், அமெரிக்காவின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாத வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே, தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரகசியமாக சீனா வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக பொறுப்பேற்ற அவர், நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கும் சென்றதில்லை. முதல் முறையாக சீனா சென்றுள்ளார். அங்கு சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபபடுத்தப்பட்டு உள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளன.

Share This Post

Post Comment