கிளிநொச்சியில் நான்கு மாணவர்கள் மாயம்! தேடுதலில் பொலிஸ்!

ekuruvi-aiya8-X3

missingகிளிநொச்சி பரந்தன் இந்துமகாவித்தியாலய மாணவர்கள் நான்குபேரை நேற்று மாலைவரை காணவில்லையென கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று காலை பாடசாலைக்குச் சென்ற இவர்கள் நான்குபேரும் மாலை வரை வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிசார் விசாரணைசெய்தபோது,

குறித்த நான்குபேரின் படிப்புத் தொடர்பில் அவர்களது பெற்றோருடன் கதைப்பதற்காக நேற்றைய தினம் பெற்றோரைச் சந்திப்பதற்காக அழைத்திருந்தோம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் அச்சம் காரணமாக தலைமறைவாகியிருக்கலாம் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இம்மாணவர்களின் பெற்றோர் தமக்கு இதுதொடர்பில் எதுவுமே தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

காணாமற் போன தரம் 10 இல் கல்வி பயிலும் குமரபுரம் பகுதியை சேர்ந்த குமார் கார்த்தீபன் (வயது 15), பரந்தன் பகுதியை சேர்ந்த இந்திரன் இசைவாணன் (வயது 15), பிரபாகரன் பிரவின் (வயது 15), தரம் 11ல் கல்வி பயிலும் பரந்தன் பகுதியை சேர்ந்த தர்மராசா ரகுலன் (வயது 16) ஆகிய பாடசாலை மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment