கிளிநொச்சி அகழ்வில் விடுதலைப் புலிகளின் எண்ணெய் தாங்கி மீட்பு

Thermo-Care-Heating

tank-Lகிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப் படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப் படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

விமானப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மீட்க்கப்பட்ட சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொண்ட வெற்று எண்ணெய் தாங்கி இன்று கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு பின் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முகாம் ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

ideal-image

Share This Post

Post Comment