மாலை நேர ஸ்நாக்ஸ் காஸ்தா கசோரி

khasta-kachori1
தேவையான பொருட்கள் :
மைதா – 1 கப்,
பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
ஊறவைத்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1 டீஸ்பூன்,
ஆம்சூர் பொடி – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
maxresdefault
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணிநேரம் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.
ஊற வைத்த பச்சைப்பட்டாணியை மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பட்டாணி விழுதை போட்டு அதனுடன் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், சாட் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
பிசைந்த மாவை சின்னச் சின்ன பூரிகளாக திரட்டி அதனுள் பச்சைப்பட்டாணி பூரணத்தை வைத்து மூடி வடைபோல் லேசாக தட்டி வைக்கவும். அனைத்து மாவையும் இப்படி செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்து இனிப்பு சட்னி, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
காஸ்தா கசோரி ரெடி.

Related News

 • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *