மோடியின் அதிரடி முடிவிற்கு கேரள அரசு விமர்சனம்

ekuruvi-aiya8-X3

kerala_0911

நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

இதற்காக இன்று வங்கிகள் செயல்படாது. இன்றும் நாளையும் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று இரவு 8 மணியளவில் வெளியானது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் செயல்படாது என்பதால் சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், பெட்ரோல் பங்குகுகளிலும் பல இடங்களில் கூட்டம் இருந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற மத்திய அரசின் நடவடிக்கையை கேரள அரசு விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் இருந்து கருப்பு பணத்தை வெளியேற்ற முடியாது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள நிதி மந்திரி டி.எம்.தாமஸ் ஐசக், ரூ. 1000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறுவது என்பது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான தீர்வாகாது என்று தெரிவித்தார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சாரி கூட்டணி அரசாங்கள் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment