கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது – வடக்கு மாகாண முதலமைச்சர்!

Thermo-Care-Heating

vik258நாடு சுதந்திரம் அடைந்து 69ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றும் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடவேண்டியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

கேப்பாப்புலவு மக்கள் தமது இராணுவத்தினரிடமிருந்து தமது நிலத்தை மீட்பதற்காக இன்று ஆறாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எமது மக்கள், அவர்களது உரிமைகளுக்காக அவர்களே போராடவேண்டியுள்ளது.

மேலும் இந்த மக்களின் போராட்ட உண்மைகளை வெளியே எடுத்துச் சொல்லவேண்டும். தொடர்ந்தும் அவ்வாறு செய்திகள் வெளிச்செல்வதினாலே இந்த பிரச்சினையை இலகுவில் தீர்க்கமுடியும் என்று நம்புகின்றேன்.

குறிப்பாக கடந்த முறை முல்லைத்தீவில் இராணுவத்தினருடன் பொதுமக்கள் தொடர்புபட்ட பிரச்சினைகள் உண்மையில் ஜனாதிபதிக்கு சரியாக தெரியாது.

எனவே இந்த மக்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கும் அதே வேளை இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு உடன் தெரியப்படுத்தவுள்ளேன்.

மேலும் பொதுமக்களின் பூர்வீக நிலங்களை பெற்றுக் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment