ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளிக்காது வெளியேறிச் சென்ற அமைச்சர்கள்!

Facebook Cover V02

Captureநிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் இருவரும் இடை நடுவே வெளியேறி சென்ற சம்பவொன்று இடம்பெற்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கும் விடயம் தற்பொழுது அரசியல் மேடைகளில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கூட்டு எதிர்கட்சியினரும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இன்று நிதி அமைச்சில் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பங்குபற்றினர்.

அமைச்சர்களின் உரையை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கேள்விக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்கள் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் கேள்வியெழுப்பினர்.

எனினும் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இடைநடுவே ஊடகவியலாளர் மாநாட்டை நிறைவு செய்து அமைச்சர்கள் இருவரும் வெளியேறிச் சென்றனர்.

குறித்த சம்பவமானது ஊடகவியலாளர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment