பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெற்றது என்ன? இழந்தது என்ன? – வெள்ளை அறிக்கை கேட்கும் கெஜ்ரிவால்

Facebook Cover V02

Kejri_walநாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழல். இது முற்றிலும் அரசியல் மற்றும் ஊழலால் வழிநடத்தப்படுகிறது. அனைத்து ஊழல்களின் மொத்த உருவம் இது.

எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறாம். இதனால் பெற்றது என்ன? இழந்தது என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டிசம்பர் 31-ம் தேதி நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையில் ஒன்றுமில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அடைந்த ஆதாயம் மற்றும் இழப்புகள் குறித்து பேசவில்லை.

சர்வதேச அளவில் கேலிக்குரியவராக பிரதமர் மாறிவிட்டார். ஒட்டுமொத்த நடைமுறைகளையும் உலகில் உள்ள பெரிய பொருளாதார வல்லுநர்கள் தவறாக பேசுகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங் உலக அளவில் மதிக்கப்பட்டார். ஆனால் மோடியோ, பிரதமர் அலுவலகத்தின் நற்பெயரை அழித்து விட்டார்.

ரொக்கமில்லா பொருளாதாரம் குறித்து மோடி பேசுகிறார். நன்கொடைகளை பணமாக பெற்றுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வை ரொக்கமில்லா அமைப்பாக அவர் முதலில் மாற்ற வேண்டும். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 648 பேரின் விவரம் உள்ளது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என மோடி அறிவித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment