சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ekuruvi-aiya8-X3

Ruwan-Gunasekeraசிறிலங்கா காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவுக்கு எதிராக, ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கையைத் தமக்குச் சமர்ப்பிக்குமாறும், அமைச்சர் சாகல ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரவை ஊடகங்களுடன் தொடர்புடைய எந்தப் பணியிலும் நியமிக்கக் கூடாது என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment