கோவையில் பாராசூட் சாகசத்தின்போது பரிதாபம் : 60 அடியில் இருந்து விழுந்து தொழிலதிபர் பலி

ekuruvi-aiya8-X3

Daily_News_2867962121964கோவை : கோவையில், பாராசூட்டில் பறந்து சாகசம் செய்தபோது, 60 அடி உயரத்தில் இருந்து தொழில் அதிபர் விழுந்து பலியானார். கோவை பீளமேடு கே.டி.வி.ஆர். ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் மல்லேஸ்வரராவ் (53). பவுண்டரி உதிரிபாக தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் நேற்று மதியம் பீளமேடு கொடிசியா வளாகத்தில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்ய சென்றார். பாராசூட் வாகனம் ஒன்றுடன் இணைத்து கட்டப்பட்டு பறக்க விடப்பட்டது. உடலில் பாதுகாப்பு கயிறு கட்டி கொண்ட இவர், 70 அடி உயரம் வரை பறந்து பயிற்சி பெற்றதாக தெரிகிறது. அப்போது திடீரென கயிறு அறுந்து, 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வலது கை உடைந்து தொங்கியது. மார்பு, காலில் கையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

பாராசெயிலிங் பயிற்சியை தனியார் அமைப்பினர் கடந்த சில நாட்களாக அளித்து வருகின்றனர். கடந்த 2 நாளாக, கோவை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் சிலர் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு மணி நேரம் பயிற்சி பெற ரூ.500 கட்டணமாக பெறப்பட்டுள்ளது. பாராசூட் பயிற்சியை பார்த்த பொதுமக்கள் சிலர், ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சிக்கு தரமற்ற பாராசூட் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கயிறு, கிளாம்ப் போன்றவை தரமில்லாமல் இருந்ததால் அறுந்து விட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் பலத்த காற்று வீசியதாகவும், இதனால் பாராசூட் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதாகவும், இழுக்கும்போது கயிறு அறுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து பாரசூட் பயிற்சியாளர் பாபுவை கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘சாகச விளையாட்டு என ஆபத்தான பயிற்சியை அனுமதி பெறாமல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே இதில் ஒரளவு பயிற்சி பெற்றவர்தான் பறக்க முடியும். இல்லாவிட்டால் மைதான தளத்தில் காற்றின் வேகத்தில் கட்டுபாட்டுடன் பறந்து இலக்கில் இறங்க முடியாது. கட்டணம் வசூலித்து சம்பாதிக்கும் நோக்கத்தில் இதுபோல் பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர். பாராசூட் பயிற்சியில் தொழிலதிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பாராசெயிலிங் பயிற்சியை தனியார் அமைப்பினர் கடந்த சில நாளாக அளித்து வருகின்றனர்.
* ஒரு மணி நேரம் பயிற்சி பெற ரூ.500 கட்டணமாக பெறப்பட்டுள்ளது.
* பாராசூட் வாகனம் ஒன்றுடன் இணைத்து கட்டப்பட்டு பறக்க விடப்பட்டது.
* பயிற்சிக்கு தரமற்ற பாராசூட் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
* கயிறு, கிளாம்ப் போன்றவை தரமில்லாமல் இருந்ததால் அறுந்து விட்டதாக தெரிகிறது.
* சாகச விளையாட்டு என ஆபத்தான பயிற்சியை அனுமதி பெறாமல் நடத்தியுள்ளனர்.

Share This Post

Post Comment