“கத்துக்குட்டியாக அரசியலுக்கு வந்த சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு சபையிலிருந்து ஒதுங்க வேண்டும்“ – உறுப்பினர் சுகிர்தன் பகிரங்க கோரிக்கை!

ekuruvi-aiya8-X3

sukirthanவடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்காலத்தில் மாகாணசபையிலிருந்து ஒதுங்க வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்துக்கான அமர்வில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சித்த சுகிர்தன் அதன் தொடராக உரையாற்றும் போது,

“இந்தச் சபைக்கு எங்களில் ஒரு சிலரைத் தவிர முதலமைச்சர் உள்ளிட்ட நாங்கள் பலரும் கத்துக்குட்டிகளாகவே அரசியலுக்கு வந்திருந்தோம். தற்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆகவே அவர் எமது மக்களுக்காக இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தினூடாக குரல் கொடுக்கவேண்டிய அவ்வேளையில், எமக்கு அடுத்து நல்லதொரு முதலமைச்சரும் கிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயற்பட்ட நால்வர் கொண்ட அணியில் சுகிர்தன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment