கத்தரிக்காயின் நன்மை தீமைகள்

kaththirika 30புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்திரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும். பிஞ்சுக் கத்திரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும். கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.eggplants

இந்த கத்திரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது.

£கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

•கத்திரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

•புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

•கத்திரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

•கத்திரிக்காயிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ், நமது சருமத்தை மென்மையாக்கி, நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. மேலும் மூளைச் செல்களை பாதுகாத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

•விட்டமின்கள் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

€கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏன் அலர்ஜி ஏற்படுகிறது?

•கத்திரிக்காயில் அதிகப்படியான புரொட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதால், கத்திரிக்காய் சாப்பிடும் சிலர் உடம்பின் தன்மைக்கு ஒத்துப் போகாமல் அலர்ஜியை உண்டாக்குகிறது.

•கத்திரிக்காய் சாப்பிடுவதால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.

•ஹிஸ்டமின் நமது உடலிலேயே சுரக்கப்படும் ஒரு புரோட்டின். எனவே ஹிஸ்டமின் அதிகம் உள்ள உடலிற்கு ஒவ்வாத கத்திரிக்காயை நாம் சாப்பிடும் போது, நம் உடம்பில் சரும அலர்ஜி, கொப்பளம் மற்றும் அரிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.


Related News

 • கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி
 • ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
 • கண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்
 • காபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா?
 • கொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்
 • மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்
 • பிணத்துக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்த மருத்துவமனை- பரபரப்பு புகார்
 • மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை ?
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *