காதலியின் பிணத்தை 15 மாதங்களாக பீரோவில் வைத்திருந்த காதலன்

ekuruvi-aiya8-X3

England-boyfriend-hid-girlfriend-body-in-cupboard-for-15இங்கிலாந்தில் காதலியின் பிணத்தை 15 மாதங்களாக பீரோவில் அடைத்து வைத்திருந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்தில் உள்ள பால்டன் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரூ கோலின் (43). அதே பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா செர்ரி(44). இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்தனர். ஒன்றாக சுற்றித்திரிந்தனர்.

இந்த நிலையில் விக்டோரியா செர்ரியை திடீரென காணவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அவர்களுடன் சேர்ந்து காதலர் ஆண்ட்ரூவும் தேடினார். இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே போலீசில் புகார் செய்தனர். இப்படியே 15 மாதங்கள் கழிந்து விட்டது. இந்த நிலையில் திடீரென ஆண்ட்ரூவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தனர்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே விக்டோரியாவின் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. பிணத்தை கடந்த 1¼ வருடங்களாக ஆண்ட்ரூ பீரோவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து ஆண்ட்ரூவை போலீசார் கைது செய்தனர். விக்டோரியாவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? அவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Share This Post

Post Comment