மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரும் வழக்கு… இரவு 10.30 மணிக்கு விசாரணை

Facebook Cover V02
மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கோரும் வழக்கு… இரவு 10.30 மணிக்கு விசாரணை
மெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!- வீடியோ சென்னை: மெரீனா கடற்கரையில், திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து திமுகவினர் மனு அளித்த நிலையில் அந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களை அது கூறியுள்ளது.

மெரினாவில் இடம் இல்லை.. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தயார்.. தமிழக அரசு திட்டவட்டம்!

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ள தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தயார் என தெரிவித்துள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை காலமானார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்தனர். அப்போது சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உரிய கவுரவம்
5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.
கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை
இதனை கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

சட்டசிக்கல்கள்
அதில் சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் ஒதுக்கீடு
ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அரசு மரியாதையுடன் காமராஜர் நினைவிடத்திற்கு அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment