கருணாநிதி – மு.க.ஸ்டாலின் வீடுகளுக்கு பாதுகாப்பு

ekuruvi-aiya8-X3

karuna-stalin2-600-450x338முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து நேற்று இரவு முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வீட்டு முன்பு தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பும் அதிக போலீசார் பாதுகாப்புக்கு நின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு மதுரைக்கு சென்றார். தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி பேத்தியின் திருமண விழாவில் இன்று காலை மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.

ஜெயலலிதா உடல் நிலை பற்றி தகவல் வெளியானதையடுத்து மு.க.ஸ்டாலின் நேற்று இரவே தூத்துக்குடி சென்றார். மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்து காரில் திருச்சிக்கு வந்தார். பின்னர் சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். அவரது இதர நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டு முன்பும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தி.மு.க. எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோந்து போலீசாரும் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்..

Share This Post

Post Comment