`கருணாநிதியிடம் ஆசி பெற்றேன்!’ – ரஜினி

ekuruvi-aiya8-X3

rajani2சென்னை கோபாலபுரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடினனார்.

கோபாலபுர இல்லத்தில் இருக்கும் கருணாநிதியை ரஜினி சந்திக்கச் சென்றபோது, ஸ்டாலின் அவரை கைகொடுத்து வரவேற்று, வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார்.

`மரியாதை நிமித்தமாகவே தி.மு.க-வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறேன். கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கலாம் என்பதற்காகவே அவரைச் சந்திக்கிறேன்’ என்று போயஸ் கார்டனில் இருக்கும் தனது இல்லத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

எனினும் இந்த சந்திப்பு குறித்து விபரமான தகவல்கள் வெளியாகாததால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

புதுக்கட்சி தொடங்கும் நிலையில் ரஜினி, கருணாநிதியை சந்தித்தமை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share This Post

Post Comment