ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட ஏற்பாடுகள் தீவிரம்

Facebook Cover V02
Karunanidhis-funeralஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்களும், அரசியல்  பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
ராஜாஜி ஹாலில் இருந்து  இறுதி ஊர்வலம் இன்று மாலை தொடங்கும் என தி.மு.க கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கத்துக்கு வருகை தந்துள்ளது. ராஜாஜி ஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

Share This Post

Post Comment