ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்

இலங்கையில் தற்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியே இடம்பெற்று வருவதாக சர்வதேசத்துக்கு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிலுள்ள இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.  அதில்  சபாநாயகர் கூறியதாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை அரசில் கடந்த ஒருவார காலமாக சதிப்புரட்சியே இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு ஜனநாயகத்துக்கு முரணாக தற்போது நடைபெறும் அரசியல் செயற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம், நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.

மேலும் நல்லாட்சியில் நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி கூறிய அனைத்து விடயங்களுக்கும் முரணாக செயற்பட்டு வருகின்றார்.

அதாவது  ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியில் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டு வருகின்றனர்” என கருஜயசூரிய அக்கடிதத்தில் கூறியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.


Related News

 • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
 • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
 • இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது
 • உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி வழங்கியது யார்?
 • ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்
 • புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *