கார்த்திக் – கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

Thermo-Care-Heating
Sivakarthikeyan-விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குனர் திரு இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். மேலும் பிரபல நடிகரும், கவுதம் கார்த்திக்கின் தந்தையுமான ‘நவரச நாயகன்’ கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அப்பா, மகன் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகிகளாக ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், காமெடியில் வேடத்தில் சதீஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது, இப்படத்திற்கு ‘Mr.சந்திரமௌலி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தின் முன்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளனர். ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment