நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்காமல் அலட்சியம்: மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த அவலம்

Facebook Cover V02

Pregnant-woman-gave-birth-to-her-baby-outside-a-governmentராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு ஒரு நிறைமாத கர்ப்பிணியை அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அவர் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாக கூறி, மருத்துவமனையில் தன்னை அனுமதிககும்படி பணியில் இருந்த டாக்டர்களிடம் கூறியுள்ளார்.

நிற்கக் கூட முடியாமல் தவித்த அந்த பெண்ணை சரியாக பரிசோதிக்காத டாக்டர்கள், இப்போது குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வெளியே அனுப்பி உள்ளனர். நாளை காலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்தால் போதும் என்று விரட்டாத குறையாக கூறியுள்ளனர்.

இதனால், வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளர் அந்தப் பெண். வெளியே வந்து சாலையோரம் நின்றபோது வலி அதிகமானது. அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. இதனால் பதறிப்போன உறவினர்கள், உள்ளே இருந்த டாக்டர்களிடம் தகவல் தெரிவித்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாக்டர்களின் அலட்சியத்தால் சாலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Post

Post Comment