கர்ப்பிணி பெண்ணை 16 கி.மீ தூரம் மூங்கில் குச்சியில் சுமந்து சென்ற உறவினர்கள்

ekuruvi-aiya8-X3

Pregnant-Woman2._L_styvpfநாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தவர்களின் சடலங்களை தோளில் சுமந்து செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் சாலை வசதி துண்டிக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்ணை அவரது உறவினர்கள் 16 கி.மீ தூரம் மூங்கில் குச்சியில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

காளகந்தி மாவட்டத்தில் உள்ள கன்சாபந்தல் கிராமத்தைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது சாலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார். சாலையில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்ததால் சாலை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

16 கி.மீ. சென்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து, சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அந்த பெண் லஞ்சிகார்க் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

இது குறித்து காளகந்தி அதிகாரி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் வேறு புறக்காரணத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார். மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அழகான குழந்த ஒன்று பிறந்ததாகவும் அவர் கூறினார்.

Pregnant-Woman._L_styvpf Pregnant-Woman-Carried-On-Stretcher-For-16-Km_

Share This Post

Post Comment