பத்து ஆண்டுகள் கர்ப்பிணியாக இருந்த சீனப்பெண்?

ekuruvi-aiya8-X3

Getting-Pregnant-14-Times-In-10-Yearsசீனாவில் வசித்து வரும் ஸெங், 2005–ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அதற்கு தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைத்தது. ஆனால் சிறைக்கு செல்லாமல், 10 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்திருக்கிறார்! எப்படி என்கிறீர்களா?… கர்ப்பிணி வேடத்தில் தான்.

சீனாவில் பெண் குற்றவாளிகளை அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது சிறையில் அடைப்பதில்லை. குழந்தை பெற்ற பிறகுதான் சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்தச் சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஸெங்.

தண்டனை வழங்கப்பட்டபோது ஸெங் கர்ப்பமாக இருந்ததால், அவரை சிறையில் அடைக்கவில்லை. குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஸெங் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் ஸெங் மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் மீண்டும் சிறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். இப்படிக் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 14 முறை கர்ப்பமாக இருந்ததால், ஸெங்கை சிறையில் அடைக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.

ஒரு சமயத்தில் சீனா போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட… ஸெங்கை கண்காணித்திருக்கிறார்கள். அப்போது தான் கர்ப்பம் தரித்து தண்டனையில் இருந்து தப்பிப்பதும், வெளியே வந்தபிறகு கர்ப்பத்தை கலைத்துவிட்டு ஊர் சுற்றுவதும் தெரியவந்திருக்கிறது. இப்படி சட்டத்தை ஏமாற்றியதற்காக, தற்போது அவருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment