கர்நாடக மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளியை இழுத்துச்சென்ற கொடுமை

ekuruvi-aiya8-X3

kar_03கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள மேகான் அரசு மருத்துவமனையில், வீல் சேர் மற்றும் ஸ்டிரெக்சர் வசதி இல்லாததனால், 75 வயதான தனது கணவரை, ஸ்கேன் எடுக்க அவரது மனைவி, தரையில் இழுத்துச்சென்ற வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

வயதுமுதிர்வு மற்றும் காலில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக, அமீர் சஹாப், நடக்க இயலாத சூழ்நிலையில், மேகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு துணையாக மனைவி பமிதாவும், மருமகளும் இருந்தனர்.

டாக்டர்கள் உடனே எக்ஸ்ரே எடுத்துவர சொல்லியதை தொடர்ந்து, பமிதா வீல்சேர் அல்லது ஸ்டிரெக்சர் தருமாறு மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டார். வீல் சேர் மற்றும் ஸ்டிரெக்சர் இல்லை என்ற பதிலே அவர்களிடம் இருந்து வந்தது. டாக்டர்கள் அவசரமாக எக்ஸ்ரே அறிக்கை வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல், பமிதா, அமீரை, தரதரவென்று இழுத்து எக்ஸ்ரே ரூமை அடைந்தார்.

ஸ்டிரெக்சர் மற்றும் வீல் சேர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அரசு மருத்துவமனை இயங்கிவருவது சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Share This Post

Post Comment