ஜெயலலிதாவின் அபராத தொகையை வசூலிக்கும் கோரும் கர்நாடகா அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

Thermo-Care-Heating
supreme_courtசொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க முடியாது.
இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறைத் தண்டனை அனுபவிக்கவில்லை என்றாலும், அபராதத் தொகையை வசூலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், அபராதத் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றித் தெளிவாகக் கூறப்படவில்லை என்று கர்நாடக அரசு கருதியது. இதனையடுத்து, தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத் தொகையை விரைந்து வசூலிக்கும் நோக்கில், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், கர்நாடக அரசின் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்க தகுந்தது அல்ல என்று கூறி கர்நாடக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ideal-image

Share This Post

Post Comment