சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வி

ekuruvi-aiya8-X3

vatal-nagarajகர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், மஜத 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

இதனால், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க உள்ளது. இந்நிலையில், சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வெறும் 5977 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

Share This Post

Post Comment