300 கோடி பேர் பார்த்து ரசித்த காணொளி!

ekuruvi-aiya8-X3

despacito._L_styvpfயூடியூப் தளத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ இது தான். இந்த காணொளியை எத்தனை பேர் பார்த்துள்ளனர், இதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

யூடியூப் தளத்தில் அதிகம் பேர் பார்த்து ரசித்த காணொளிகளில் லூயிஸ் ஃபோன்ஸி மற்றும் டேடி யான்கீயின் டெஸ்பாகிடோ பாடல் காணொளி முதலிடத்தில் உள்ளது. உலகளவில் இந்த காணொளியினை 3,096,363,382 யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

யூடியூப் தளத்தில் ஜனவரி 2017-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் வீடியோ ஏழு மாதங்களில் இத்தகையே சாதனையை படைத்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட ‘சீ யூ அகெய்ன்’ (See You Again) சையின் கங்கனம் ஸ்டைல் வீடியோ படைத்த சாதனையை இரண்டு ஆண்டுகளில் முறியடித்தது. இந்நிலையில், டெஸ்பாகிடோ பாடல் வீடியோ சீ யூ அகெய்ன் உள்ளிட்ட காணொளிகளின் சாதனையை முறியடித்துள்ளது.

முன்னதாக கங்கனம் ஸ்டைல் காணொளி யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளி என்ற சாதனையை 2012-ம் ஆண்டு முதல் இரண்டுகளுக்கு தக்க வைத்திருந்தது. டெஸ்பாகிடோ பாடல் வீடியோ இந்த மாதத்தில் அதிகம் முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வீடியோவாக உள்ளது.
யூடியூபில் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வரும் டெஸ்பாகிடோ உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. ஸ்பானிஷ் மொழியில் உள்ள டெஸ்பாகிடோ பாடல் காணொளியினை பெரும்பாலானோர் ரீமிக்ஸ் கவர் பதிப்புகளை வெளியிட, இந்த காணொளிகளும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உலகில் யூடியூப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவு அதிகரித்து, 100 கோடிக்கும் அதிகமானோர் காணொளிகளை ஸ்ட்ரீம் செய்து வருவது டெஸ்பாகிடோ வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் யூடியூப் VidCon 2017 எனும் விழாவில், மாதந்தோரும் 150 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தை சைன் இன் செய்து காணொளிகளை பார்த்து வருவதாக யூடியூப் தெரிவித்தது.

யூடியூப் தளத்தில் சைன் இன் செய்யாமல் பார்ப்பவர்களும் அதிகம் ஆகும். மேலும் யூடியூப் தளத்தில் சைன் இன் செய்வோர் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தளத்தில் காணொளிகளை பார்த்து ரசிக்கின்றனர் என யூடியூப் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment