“தங்கள் தேவைக்காக எங்களை நாடி வருகின்றனர்“ – காணாமலாக்கப்பட்டோரின் உறவுக் கண்ணீர்!

mullaitivuஒவ்வொருவரையும் நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோம் இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை என முல்லைத்தீவில் 280 ஆவது நாளாக போராடும் காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட காணாமல்போன உறவின் தாயொருவர்…..

எங்களுடைய போராட்டத்தை இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. எங்களுடைய பிள்ளைகள் கிடைக்கும் என இந்தா முடிவு சொல்வார்கள் அடுத்தமாதம் முடிவு சொல்வார்கள், அடுத்தமாதம் பதில் கிடைக்கும் என ஒவ்வொரு தடவையும் நாங்கள் ஏங்கி தவித்துக்கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு யாருமே முடிவு சொல்லவில்லை. எத்தனையோ சந்திப்புக்களுக்கு சென்று எண்ணற்ற கடிதங்களை கொடுத்தும் எல்லோரையும் கேட்டுள்ளோம். இதுவரை யாரும் எந்த பதிலும் சொன்னதில்லை.நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த முகாமில் இருந்து மீள்குடியேற்றம் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வந்தார்.

நாங்கள் எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடும் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்ற ஒரு ஆவலுடன் வாக்களித்தோம். எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை அதனைத்தொடர்ந்து மைத்திரி ஜனாதிபதியாக வந்தார். அவரையும் நாங்கள் கூடிய பாகம் எதிர்பாத்தோம் அவரும் அதையே செய்தார்.

திருப்பவும் இப்போது எங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். ஆனால் நாங்கள் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை. எங்களுடைய பிள்ளைகளை தொலைத்துவிட்டு தேடி ஒரு முடிவுமில்லை. எங்களுக்கு ஒரு ஆறுதலும் இல்லை. இப்போது தங்களுக்கு ஒரு தேவை வரும் போது எங்களை நாடி வருகின்றனர்.

உங்களுக்கு எங்களுடைய இரண்டு கதவும் திறந்திருக்கும். எப்போதும் எங்களை வந்து சந்தியுங்கள் நாங்கள் வேண்டியது செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அதை இன்னும் நம்ப தயாரில்லை.

எங்கட பிள்ளைகள் தொடர்பில் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு தாருங்கள். எங்கட பிள்ளைகள் தொடர்பான ஒரு பதில் தாருங்கள் இனியும் எங்களால் தாமதிக்க முடியாது. ஏனென்றால் இப்போது ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு யோசித்து அழுது கவலைப்பட்டு பிள்ளைகளைப்பற்றியே சிந்தித்து சொல்லமுடியாத அளவுக்கு வருத்தங்கள் வந்துவிட்டது.

அதனால் எங்களால் நடக்கவோ கொஞ்ச நேரம் நிக்கவோ முடியாமல் உள்ளது. ஏனென்றால் நாங்கள் வேதனைப்படுகிறோம். எங்களுக்கு மிக விரைவில் நல்ல ஒரு தீர்வை தாருங்கள் என மன்றாட்டமாக கோருகிறேன் என கண்ணீர் மல்க  கூறினார்.


Related News

 • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
 • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *