காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் 6.9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

Thermo-Care-Heating

KKS-agrement-india-srilankaகாங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் 6.9 பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பான உடன்படிக்கையில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா மற்றும் நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் கலாநிதி சமரதுங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியுதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் முழு வசிதிகளை கொண்ட வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் இந்த துறைமுகம் பிராந்தியத்தின் முக்கிய கடல் எல்லையின் கேந்திர நிலையமாக திகழும்.

மேலும் வடக்கில் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் வடக்கில் வர்த்தக ரீதியில் அமையக்கூடிய ஒரு துறைமுகமாக காங்கேசன்துறை துறைமுகம் அமைவதுடன் இந்துசமுத்திர பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கில் சீன அரசாங்கத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையப்படுத்திய சீன பொருளாதார விஸ்தரிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இந்தியாவினால் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்பட உள்ளது.

ideal-image

Share This Post

Post Comment