சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குகின்றது சிறீலங்கா!

Facebook Cover V02

srilanka & china1தென் மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வர்த்தக வலையத்தை உருவாக்குவதற்காக சீனாவுக்கு சிறீலங்கா அரசாங்கம் 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான உடன்பாடு கைச்சாத்தாகவுள்ளதென சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் சந்திப்பினை நடாத்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த சிறப்பு பொருளாதார வலயத்தின்மூலம் 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்றுமதி மற்றும் கைத்தொழில்துறையின் வருமானத்தை அதிகரிக்க அசாங்கம் முயற்சிக்கின்றது.

அடுத்த சில ஆண்டுகளில் அரசாங்க வருமானம் 16 தொடக்கம் 17 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். இந்த இலக்கை எட்டாவிடின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

42 மில்லியன் டொலர் கடனுதவி பெறும் உடன்பாடு உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரத்திற்கு நீர் வழங்கல் செயற்றிட்டத்திற்காக யப்பானிடமிருந்து 46 பில்லியன் ரூபா நீண்டகாலக் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

இந்த உதவிகளை சிறீலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment