காணி விடுவிப்பு குறித்து மங்களவின் கருத்தில் சந்தேகம்! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ekuruvi-aiya8-X3

Suresஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்து, இராணுவத்தின் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாது என்ற விதத்தில் அமைந்துள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கிற்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர்கூட 3000 ஏக்கர் காணிகள் படையினரின் தேவைக்கு வைத்திருப்பதாக கூறியதாகவும், சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். ஐ.நா பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.,

ஐ.நா தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. ஜெனிவாவில் பேசப்பட்ட விடயங்கள், அதன் உண்மைத்தன்மை மற்றும் நடைமுறைச் சாத்தியம் குறித்து கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment