கண்டி சம்பவம் தொடர்பில் 280 பேர் கைது

ekuruvi-aiya8-X3

ruvan-gunaகண்டியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய பிரதான சந்தேகநபர்கள் 10 பேரை பயங்கரவாத புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச், 13) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரமணமாக 445 வீடுகள் மற்றும் வியாபார நியைங்கள் சேதமாக்கபட்டுள்ளதுடன் 65 வணக்கச்தளங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்டி, குண்டசாலை பகுதியில் உள்ள மஹாசோன் பலகாயவின் அலுவலகத்தில் இருந்து இனவாதத்தை தூண்டும் துண்டுப்பிரசுரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Share This Post

Post Comment