கணவருக்கு புலிகளுடன் தொடர்பு எனக் கூறினால் மாத்திரமே உடலைத் தருவோம் என மிரட்டினர்!

Facebook Cover V02

aaa-720x480கணவனின் உடலை தரவேண்டுமானால் புலிகளுடன் தொடர்புபட்டவர் எனக் கூறினால் மாத்திரமே சடலத்தினைத் தருவோம் என இராணுவத்தினர் மிரட்டினர் என இன்று(வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போதே பெண்ணொருவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும்போது எனது கணவர் புதுக்குளம் பகுதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். கணவரின் சடலத்தினைக் கையளிக்கவேண்டுமானால், விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது.

பல்வேறு சிரமத்தின் மத்தியில் கணவரின் இறுதிக்கிரியையைக்கூட செய்யமுடியாதுபோனது. எனது கணவரைக் கொன்றது இராணுவத்தினரே என கண்ணால் கண்டவர்கள் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட எனது கணவனுக்கு நீதி வேண்டும்.

கிளிநொச்சியில் வசிக்கும் எனது குடும்பம் பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்கின்றது. கணவரை இழந்த நிலையில் 3 பிள்ளைகளுடன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றேன்.

நல்லிணக்கம் கிடைக்கவேண்டுமானால் என்னைப்போன்ற பெண்களில் நீங்கள் அக்கறை செலுத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment