செனல் 4 காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை

sdsd

kelamசெனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட யுத்தக்குற்ற காணொளிகளை அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புமாறு கெலம் மக்ரே கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை இராணுவத்தினரின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நான்கு காணொளிகளை வெளியிட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட இக்காணொளிகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கை கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. எனினும் குறித்த காணொளிகள் போலியானவை என்று அண்மைக்காலம் வரை அரசாங்கம் மற்றும் இராணுவத்தரப்பு மறுத்து தெரிவித்துவந்தது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் செனல் 4 காணொளிகள் நம்பகத் தன்மையானவை என்றும், இராணுவத்தினர் அவற்றில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்காணொளிகள் போலியானவை என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்தும் கொண்டுள்ளார்.

இதற்கிடையே குறித்த காணொளிகள் நம்பகத் தன்மையானவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் கூற்றுக்கு செனல் 4 தயாரிப்பாளர் கெலம் மக்ரே பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காணொளிகளை இலங்கையின் அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Post

Post Comment