காணாமல் போனோரை கண்டறிய மீண்டும் ஒரு குழுவாம்?

ekuruvi-aiya8-X3

Mangala-Samaraweera-640x400-190x122காணாமல்போனவர்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்கான ஒரு செயலணியை அமைத்து ஒரு பொறிமுறையையும், கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவுக்கு எமது நிபுணத்துவக் குழுவொன்று சென்று கலந்துரையாடவுள்ளது. எதிர்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தி செயற்படுத்துவோம் என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.”காணாமல் ஆக்­கு­வதை காணாமல் ஆக்­குவோம்” என்னும் தொனிப்பொருளில் நேற்று அக்­க­ரைப்­பற்று – அதா­வுல்லாஹ் அரங்கில் இடம்­பெற்ற விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்ட்டுள்ளார்.

இந்­நி­கழ்­வில் அமைச்சர்மனோ கணேசன்,யாழ்.மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்­ளிட்ட பிர­மு­கர்கள்துறை­சார்ந்தோர் பலர் கலந்துகொண்­டனர். தொடர்ந்தும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கருத்துத் தெரி­விக்­கையில்,மக்­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­வர்கள் தற்­போது இலங்கை முழு­வதும் சென்று இன­வா­தத்­தி­னையும் மத வாதத்­தி­னையும் தூண்டி கள்­ளத்­த­ன­மாக கட­வு­ளுக்கு தேங்காய் உடைக்கும் பட­லத்­தினை கொண்டு வந்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் கள்ளத் தன தேங்காய் உடைப்பு தற்­போது சரி­வ­ராத கார­ணத்­தினால் ஜெனீ­வாவில் உள்ள வெ ள்ளை நிற கட­வுள்­களைத் தேடி­ய­லைய தொடங்கி விட்­டார்கள்.

கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளைப்போல் நாமும் வெறும் வாக்­கு­று­தி­களை மட்டும் வழங்­கு­ப­வர்கள் என்று நீங்கள் நினைக்­கலாம். இவர்­களும் எம்மை ஏமாற்­று­வெ­தற்­கென்றே ஆட்சி பீடம் ஏறி­ய­வர்கள் என நீங்கள் எண்­ணலாம். அடிப்­படை வாதி­க­ளி­னதும் இன­வா­தி­க­ளி­னதும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு இந்த அர­சாங்கம் அடி­ப­ணிந்து மௌனித்து விடும் என்று மக்கள் நினைக்­கலாம். ஆனால் இந்த நாட்­டி­லுள்ள எந்த வித­மான அடிப்­ப­டை­வா­தி­களின் அடிப்­படை வாதத்­திற்கும் அடி­ப­ணி­யாது தொடர்ச்­சி­யாக மக்­களின் அனைத்­து­வித பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வினைப் பெற்றுக் கொடுக்­காமல் நாம் ஒரு­போதும் நின்­று­விட மாட்டோம்.

அர­சியல் ரீதி­யாக இந்த நாட்டில் ஒதுக்­கப்­பட்­ட­வர்கள் எமது செயற்­பா­டு­களை இல்­லாமல் செய்­வ­தற்கும் தடுத்து நிறுத்­து­வ­தற்கும் முனை­கின்­றார்கள்.

இவர்­களின் சதி முயற்­சிக்கு நாம் ஒரு­போதும் அஞ்­சி­விட மாட்டோம். இவர்­களின் சூழ்ச்­சி­க­ளுக்கு சோரம் போகாமல் நாம் மக்­களின் நன்­மைக்­கான பய­ணத்­தினை எத்­தடை வரினும் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

இந்த நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை தேடிக் கொடுப்­ப­தற்கும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதன் உண்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கும் அவ்­வாறு காணாமல் போன­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு பெற்றுக் கொடுப்­ப­தற்கும் நாம் பாரிய செயற் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அது­மட்­டு­மல்­லாமல் இந்­நாட்டில் இனி­வரும் காலங்­களில் ஒரு­வர்­கூட காணாமல் ஆக்­கப்­பட மாட்­டார்கள் என்ற உத்­த­ர­வா­தத்­தினை நாம் உங்­க­ளுக்கு வழங்­கு­கின்றோம்.

இந்த நாட்டில் கடந்த காலங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய தகவல் பெறும் செய­ல­ணி­யினை நாம் தற்­போது உரு­வாக்­கி­யுள்ளோம். அவர்கள் உங்­களை நாடி வரும்­போது காணாமல் ஆக்­கப்­பட்­டது தொடர்­பான அனைத்துக் கருத்­துக்­க­ளையும் அவர்­க­ளிடம் தெரி­யப்­ப­டுத்­துங்கள். அதன் மூலம் நியா­ய­மான தீர்­வினை மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்­க­வுள்ளோம்.
அது­மட்­டு­மல்­லாமல், இந்­நாட்டில் இனிமேல் காணாமல் ஆக்­கப்­படும் விடயம் இடம்­பெறக் கூடாது என்­ப­தற்­காக செஞ்­சி­லுவைச் சங்­கத்­தி­ன­ரோடு இணைந்து இலங்­கையில் இவ்­வி­ட­யத்­திற்­கென தனிக் காரி­யா­லயம் ஒன்றை நிறு­வு­வ­தற்­கான சட்ட திட்­டங்­களை தயா­ரித்து வரு­கின்றோம். அதனை மிக விரைவில் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ர­வுள்ளோம்.

இந்­நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் மீதான உண்­மை­யினை தேடு­வ­தற்­கான புதிய பொறி­மு­றை­யொன்றை அமைப்­ப­தற்­காக தென் ஆபி­ரிக்க நிபு­ணத்­துவக் குழு­வுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். எதிர்­கா­லத்தில் இவர்­களின் நடை­மு­றை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­ப­ட­வுள்ளோம். இதனால் நாம் தேடி­ய­லைந்த பல விட­யங்­க­ளுக்கு தீர்­வுகள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

நான் ஜெனீவா சென்றிருந்த போது கடந்த கால ஆட்கடத்தல், படுகொலைகள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையினூடாக ஒரு குழு அமைத்து செயற்படுவதற்கு வாக்குறுதியளித்தேன். இதன் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பு, ஆலோசனைகள் தேவைப்படின் அதனையும் பெறுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் எனக் கூறினேன். இதன் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மையைத் தேடுவதற்கான ஒரு செயலணியை அமைத்து ஒரு பொறிமுறையையும், கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவுக்கான எமது நிபுனத்துவக் குழுவொன்று அங்கு சென்று கலந்துரையாடவுள்ளது. எதிர்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தி செயற்படுவதற்கும் உள்ளோம்.

அதனுடன் உள்நாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், ஐ.சி.ஆர்.சி. ஆகியவற்றின் உதவியுடன் அதற்கான தீர்வு யோசனைகளைப் பெற்று நஷ்டஈடு மற்றும் உதவிகளை செய்யவுள்ளோம்.

இதேவேளைகடந்த டிசம்மர் மாதம் 10ஆம் திகதி மனித உரி­மைகள் தினத்­தின்­போது காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சம­வா­யத்தில் நாம் கைச்­சாத்­திட்­டி­ருக்­கின்றோம். இனிமேல் இந்­நாட்டில் வெள்ளை வேன் கடத்தல் இடம்­பெறக் கூடாது தேவை­யற்ற கொலைச் சம்­ப­வங்கள் ஏற்­படக் கூடாது என்­ப­தற்­கான வர­லாற்­றினை படைப்­ப­தற்கு நல்ல தரு­ண­மாக நாம் இதனைப் பார்க்­கின்றோம்.

எமது நாடு சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்னர் இந்­நாட்­டி­லுள்ள பல்­வே­று­பட்ட மதத் தலை­வர்கள் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்­டார்கள். ஆனால் சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் இவர்­க­ளது ஒற்­றுமை மொழி ரீதி­யா­கவும் இன ரீதி­யா­கவும் அர­சியல் ரீதி­யா­கவும் பிளவு பட்­டது. இதன் மூலம் 1970 மற்றும் 1980களில் தென்­னி­லங்­கையில் போராட்­டங்கள் ஆரம்­பித்­தன. இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்த கால­மாக இந்­நாட்டின் வடக்கில் மாபெரும் யுத்தம் இடம்­பெற்­றது. இவ்­வா­றான கார­ணத்­தினால் நாம் தொடர்ந்தும் பல்­வே­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்­பட்­ட­துடன் எமது நாட்­டுக்கு பின் இருந்த சிங்­கப்பூர், கொரியா போன்ற நாடுகள் தற்­போது எமது நாட்­டினைவிடவும் முன்­னேற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றன.

எம் நாட்டில் கடந்த 68 வருடங்களாக இருந்த நிலைமையினை நாம் தற்போது மாற்றியமைத்திருக்கின்றோம். அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களின் நலனுக்காக செயற்படும் அரசாங்கத்தினை தோற்றுவித்திருக்கின்றோம். இதனடிப்படையில் சுதந்திரக் கட்சியின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராகவும் தமிழ் மக்களின் குரலாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராகவும் செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தங்களது இராணுவத்தையோ அல்லது படுகொலைகளை செய்ய தூண்டியவர்களுக்கோ ஒருபோதும் இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுக்க போவதில்லை.மாறாக இவ்வாறு உலகையும் எம் மக்களையும் ஏமாற்ற அடிக்கடி புதிய குழுக்கள் அமைத்து தாங்கள் நேர்மையான விசாரணையை நடத்துகிறோம் எனும் நாடகத்தை மட்டுமே அரங்கேற்றுவார்கள் என்பதுதான் உண்மை.

Share This Post

Post Comment