கமல்ஹாசன் புதிய இணையதளம் தொடங்கியுள்ளார்

Facebook Cover V02
kaml-websiteநடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை இன்று தொடங்கியுள்ளார்.
அதில் கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே! என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
ஒரு புதிய தமிழகம் உங்களால் தொடங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மாதிரி கிராமம் ஒன்றை கட்டுவதற்கான எனது இயக்கத்தின் ஒரு பகுதியாக வாருங்கள் என்றும் அதில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
அதன் கீழே பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில், பெயர், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வசிக்கும் நாடு, நகரம் அல்லது மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிப்பதற்கான பக்கம் அமைந்துள்ளது.
இந்த இணையதளத்தில் தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினரும் பதிவு செய்து கொள்ளலாம்.  ஆர்வமுள்ள துறைகளாக கல்வி, தொழில் அல்லது வேலை உருவாக்கம், சுற்றுச்சூழல், சுகாதார பராமரிப்பு, உள்கட்டமைப்பு, வேளாண்மை அல்லது அக்ரிடெக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

Share This Post

Post Comment