அடிக்கடி முகம் கழுவுதல் சிறந்ததா?

ekuruvi-aiya8-X3

Micellar-Water-For-Washing-The-Faceபெண்கள் எப்பொழுதும் முகப் பொலிவுடன் அழகாக ,ருக்க வெண்டும் என விரும்புவார்களன். அதற்காக அடிக்கடி முகம் கழுவும் பழக்கத்தை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அடிக்கடி முகம் கழுவுவது சரியான பழக்கமா என்பது இங்கு கேள்வியாகவுள்ளது?

ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் முகம் கழுவினால் பொதம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள் காரணம். முகத்தினை அடிக்கடி கழுவுவதனாலும் முகம் வரட்சியடைகின்றது. அத்துடன் முகத்தில் தோல் சுருக்கமும் விரைவில் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த நிலையில் எந்த நிலையில் எவ்வாறு முகம் கழுவும் வழக்கத்தை பேண வேண்டும் என்று பார்க்கலாம்.
வெயிலில் வெளியே போய் வந்தால் சோப் அல்லது பேஸ் வோஸ் போட்டு முகம் கழுவும் பழக்கம் இருந்தால் கைவிட்டு விடுங்கள். வெயில் பட்ட சருமத்திற்கு கடலை மா அல்லது பயிற்றம் மா போட்டு முகம் கழுவது பாதுகாப்பானதும் முகம் கறுக்காமலும் வறட்சியடையாமலும் இருக்கும்.

அத்துடன் அதிகாலையில் பேஸ்வோஸ் போடாமல் சோப் பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளலாம். ஆனால் மாலையில் படுக்கைக்கு போக முன்னர் பேஸ்வோஸ் போட்டு கழுவுவதே சிறந்தது.

மேலும் வேலை செய்து கலைத்தால் அல்லது விளையாடி கலைத்தால் பப்பாசி பழம் மற்றும் தயிர் போட்டு முகத்தை கழுவும் பொழுது வியர்வை முற்றாக நீங்குவதுடன் முகம் கறுக்காமலும் வறண்டு போகாமலும் இருக்கும்.

ஆனால் ஒரு நாளைக்கு நான்கு தடவைகளுக்கு மேல் முகம் கழுவுவதை தவிர்ப்பதே சிறந்தது. அடிக்கடி முகம் கழுவினால் தோல் வறட்சி உதட்டு வறட்சி என்பன ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

Share This Post

Post Comment