கால்பந்து உலக கோப்பை: கட்டுமான பணியில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிப்பு

foodballகத்தாரில் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறும் நிலையில், விளையாட்டரங்கம் கட்டும் பணியின் போது ஒருவர் உயிரிழந்திருப்பதாக முதல் முறையாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை அந்த தொழிலாளி இறந்துள்ளதாக தெரிவித்திருக்கும் அவர்கள் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.

மோசமான பாதுகாப்பு தரங்களுக்காக இந்த ஏற்பாட்டாளர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இருப்பினும் இதுவரை மூன்று தொழிலாளர்கள் இறந்ததாக அவர்கள் கூறினாலும், யாரும் பணி தொடர்பாக இறக்கவில்லை என்கின்றனர்.

டஜன் கணக்கான தொழிலாளர்கள் இங்கு ஏற்பட்ட விபத்துக்களில் இறந்துள்ளதாக மனித உரிமைகள் குழுவினர் கூறுகின்றனர்.

உலக கோப்பை விளையாட்டு போட்டிக்கான வசதிகளின் கட்டுமானத்தில் ஈடுபடும் குடியேறிகளின் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் உள்ளன.


Related News

 • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *