யாழ் மத்திய கல்லூரி 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இறுதி நாள் நிகழ்வு – முதலமைச்சர் விசேட அதிதியுரை

cvviki_07மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே மெதடிஸ்ட் தேவாலயத் தலைவர் அவர்களே மற்றும் இங்கிருக்கும் சமயப் பெரியார்களே கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அவர்களே பெண்கள் விவகார உதவி அமைச்சர் அவர்களே எங்களுடைய கல்வி அமைச்சர் அவர்களே பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களே மாகாணசபை கௌரவ உறுப்பினர்களே மற்றும் இங்கு வந்திருக்கும் கல்லூரிப் பழைய மாணவர்களே இன்றைய மாணவச் செல்வங்களே ஆசிரியர்களே எனதருமைச் சகோதர சகோதரிகளே!

சற்று நேரத்திற்கு முன் வரையில் நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருக்கவில்லை.கடைசி நேரத்திலேனும் என்னை இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பேச அழைத்தமைக்கு என் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாழ் மத்திய கல்லூரி இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த கல்லூரி அல்லது அக்கல்லூரிகளில்ஒன்றாகும்.

2 மெதடிஸ்ட் இயக்கத்தினால் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சிறிய அளவில் தொடக்கப் பட்ட இந்தக் கல்லூரி இன்று பெரு விருட்ஷமாக வளர்ந்து படர்ந்து தனது நிழலை எங்கணும் பரப்பிக் கொண்டிருக்கின்றது. இக் கல்லூரியின் சகோதரிக் கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி என்றறிகின்றேன். அச் சகோதரிக்கல்லூரியிலேயே எனது தாயார் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் படித்ததின் நிமித்தம் நானும் உங்களுடன் சொந்தம் கொண்டாட முடியும் என்று நம்புகின்றேன். என்னுடைய கல்லூரி றோயல் கல்லூரி தொடங்குவதற்கு 20வருடங்களுக்கு முன்னரே உங்கள் கல்லூரி தொடங்கியுள்ளது என்பதை அவதானிக்கின்றேன்.

கல்லூரிகள் அன்னையர் போன்றவை. அவற்றின் அரவணைப்புக்குள் வளரும் பிள்ளைகள் உலகெல்லாம் பரந்து சென்று இருந்தாலும் வாழ்ந்தாலும் தாய் என்ற தொப்புள் கொடியுறவு அவர்கள் யாவரையும் அக் கல்லூரி களுடன் இணைக்கும் வல்லமை வாய்ந்தது. ;வேறு வருடங்களில் பிறந்திருந்தாலும் கல்லூரியில் இணைந்திருந்தாலும் யாழ் மத்திய கல்லூரி மாணவர் என்ற முறையில் உங்கள் அனைவரிடையேயும் ஒரு சகோதரத்துவம் மிளிர்வதைக் காணலாம். இதனால்த் தான் இலத்தீன் மொழியில் கல்லூரி என்பது மற்றொரு தாய் என்ற கருத்தில்Alma Mater என்று அழைக்கப்படுகின்றது.

3 உங்கள் பாரம்பரியத்தில் எனக்குத் தெரிந்த பலர் உங்கள் பழைய மாணவர்களாக இருந்திருக்கின்றார்கள். காலஞ்செனற் உச்ச நீதிமன்ற நீதியரசர் னுச.ர்.று.தம்பையா அவர்கள் மற்றும் பிரதம நீதியரசர் ர்.னு. தம்பையா அவர்கள் முன்னைய கல்விப் பணிப்பாளர் அருள்நந்தி அவர்கள் நண்பர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்கள் சட்டக் கல்லூரி சமகால நண்பர் ஏ.வு.சிவலிங்கம் அவர்கள் மேலும் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் கனகநாயகம்கனக- ஈஸ்வரன் ஜனாதிபதி சட்டத்தரணி அவர்கள் ஆகியோர் இக் கல்லூரியின் பழைய மாணவர்களே.

இன்றிருக்கும் தமிழ்ச் சட்டத்தரணிகளுள் சிரேஸ்ட சட்டத்தரணியாகத் தனது 80வது வயதில்க் கூட சட்டவானில் பவனி வந்து கொண்டிருக்கும் கனக ஈஸ்வரன் அவர்களை எமக்கீந்த இந்தக் கல்லூரிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

திரு.கனக ஈஸ்வரன் அவர்களின் நெருக்குதலும் ஆதரவுமே 6 மாதமாக முடியாது என்று இறுக்கமாக இருந்த என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது. அதிலிருந்து உங்கள் கல்லூரி மாணவர்களின் கெட்டித்தனம் புலப்படுகின்றது.

உங்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆறுமுக நாவலர் பெருமான் அவ்வாறு இங்கு பணியாற்றிய போதுதான் விவிலிய நூலாகிய பைபிளை தமிழில்மொழி பெயர்த்தார். கிறிஸ்தவத்தையும் இந்து மதத்தையும் ஆங்கிலம் தமிழ் சமஸ்கிருதம் இலத்தீன் மொழிகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்ததால்த் தான் அவரால் அவ்வாறு மொழிபெயர்க்க முடிந்திருந்தது. அந்தத் தகைமையின் நிமித்தம் நாவலர் பெருமானால் இந்து மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.

எப்பொழுதும் பன்மொழி பல் மதத் தேர்ச்சி நன்மை அளிக்கவல்லன. இன்றைய காலகட்டத்தில் நாங்கள் தமிழையும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படிக்கவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். ஒரு தமிழ் மகன் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்த்தான் சிங்கள மக்களுக்கு தனது குறைகளை எதிர்பார்ப்புக்களை தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக் கூடியதாக இருக்கும்.

வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருப்பன. அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாசைகளையுந் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள். இதையறிந்து தான் தெற்கில் பாடசாலை மாணவ மாணவியருக்குத் தமிழ் ஒரு கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது.


Related News

 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர
 • மக்கள் வெறுப்படைந்து உள்ளார்கள் – மனோ கணேசன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *