கால்கள் இல்லாத உதைபந்தாட்ட வீரன்!

37C59ED000000578-0-image-a-4_1472684797735ஒரு கால் இல்லாதவர் அந்தக்காலைக் காட்டி பிச்சை எடுத்து இலகுவாகச் சம்பாதிக்கிறார். இரண்டு கால்களும் இல்லாதவர் மிக இலகுவாக அடுத்தவரின் அனுதாபத்தைப் பெறுகிறார். இரண்டு கால்களும் இல்லாத முகமட் அப்துல்லா என்ற 22 வயது இளைஞர் உதை பந்து விளையாடி பார்ப்பவர்களை அசர வைக்கிறார். சிறுவயதில் உதைபந்தாட்டத்தில் அதிக விருப்பம் கொண்ட முகமட் அப்துல்லா 10 வருடங்களுக்கு முன்னர் ரயில் விபத்தில் முழங்காலுக்குக் கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும் மனதைச் சோரவிடாது இரண்டு கால்களும் உள்ளவர்களுடன் போட்டி போட்டு விளையாடுகிறார். தனது ஆதர்ச நாயகன் கிரிஸ்ரியானி ரொனால்டோ போல் விளையாட வேண்டும் என்பதே அவரது ஆசை.

மொகமட் அப்துல்லாவுவின் ஏழு வயதில் தாய் இறந்துவிட்டார். தகப்பன் இன்னொரு திருமணம் செய்ததில் அவருக்கு உடன்பாடில்லை. தகப்பனுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முகமட் அப்துல்லா ரயில் நிலையத்துக்குப்போய் ஒரு ரயிலில் ஏறினார். சிறிது நேரத்தில் அவர் தூங்கிவிட்டார். ஓடும் ரயிலில் இருந்து அவர் வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தபோது எதிரில் வந்த ரயில் அவரது கால்களைத் துண்டாடியது.

டாக்கா மெடிகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சையளிக்கப்பட்டது. உற்றார் உறவினர் யாருமற்ற முகமட் அப்துல்லா டாக்காவில் உள்ள பரிசல் யூசுவ் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். 18 மாதங்களில் அங்கிருந்து வெளியேறினார். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாத நிலையில் பசி வயிற்றைச் சுரண்டியது. பிச்சை எடுப்பது இலகுவானதாக இருந்தது. இரண்டு கால்களும் இல்லாத சிறுவனின் மீது இரக்கப்பட்டு அதிகளவானோர் பிச்சை போட்டார்கள்.

மொகமட் அப்துல்லாவின் தன்மானம் பிச்சை எடுப்பதை வெறுத்தது. உடம்பிலே வலு இருக்கிறது. இரண்டு கைகளும் உறுதியாக உள்ளன. நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்; ஏன் உழைத்துச் சாப்பிடக்கூடாது என மொகமட் அப்துலா கேள்வி எழுப்பினார். அபராஜியோ பங்களா என்னும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் மொகமட் அப்துல்லாவுக்கு உதவி செய்ய முன்வந்தது. டாக்கா படகுத் துறையில் பொதி சுமக்கும் வேலையை மொகமட் அப்துல்லா செய்து வருகிறார். அவரது ஆசையைத் தெரிந்துகொண்ட அரச சார்பற்ற நிறுவனம் அவருக்கு உதைபந்தாட்ட பயிற்சியை வழங்கியது. ஆரம்பத்தில் எல்லோரும் அவரை ஏளனம் செய்தனர். மன உறுதியும் கடும் பயிற்சியும் அவரை சிறந்த உதைபந்தாட்ட வீரனாக்கியது.

மொகமட் அப்துல்லாவின் விளையாட்டைப் பார்ப்பதற்காக மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. உலக நாட்டு அணிகள் விளையாடும் டாக்கா மைதானத்தில் விளையாடும் பெருமையை மொகமட் அப்துல்லா பெற்றுள்ளார்.

37C59E4000000578-0-image-a-13_1472684948019 37C59E4800000578-0-image-a-10_1472684859969 37C59E7800000578-0-image-a-6_1472684819527 37C59EB400000578-0-image-a-12_1472684920449 37C59EC000000578-0-image-a-21_1472685032159 37C59EC400000578-0-image-a-17_1472684982809


Related News

 • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
 • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
 • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
 • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
 • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
 • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *