கலப்பு விசாரணைக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் என்ன வழங்கியது?

Thermo-Care-Heating

tna5556போர்க் குற்றச்சாட்டுத் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு இணங்கவைக்க சிறீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்ன என்பதை பகிரங்கப்படுத்தவேண்டுமென வலியுறுத்தி சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்காவில் வைத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தை மையப்படுத்தியே அரசாங்கத்திற்கு எதிரான இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரான தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவின் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி நுவான் பெல்லன்துடாவ தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறீலங்காவில் கொண்டுவரப்பட்ட தகவலறியும் சட்டமூலத்தின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்கா அதிபரின் செயலாளரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னணி தொடர்பான தகவல்களை அறிவதற்கு அரசியல் யாப்பின் 14சரத்தின் 2ஆம் இலக்கச் சட்டமான தகவல் அறியும் சட்டத்திற்கமைய தனக்கு உரிமை இருப்பதாக தேசப்பற்றுடைய தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவும், சிறீலங்கா அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கமையவே, ஜெனீவாவில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலப்பு நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை உள்ளடக்கிய ஜெனீவாத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதாக கூறியிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புதல் அளித்தது எனவும் இதற்கு இணங்க வைக்க சிறீலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதனை வழங்க வாக்குறுதி அளித்தது எனவும் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டுமெனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment