கூகுளை கலங்கடித்து முதலிடத்தை பிடித்த `மெர்சல்’ தேடல்

Thermo-Care-Heating

Mersal-Trend2.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு குறித்தும் அறிவிப்பு வெளியானது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திலிருந்து “ஆளப்போறான் தமிழன்” என்ற மட்டும் நேற்று முன்தினம் வெளியானது.

விவேக் வேல்முருகன் எழுதியுள்ள இந்த பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவும் நேற்று வெளியானது. பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Vijays-Mersal-Pakka-Mass-song-from-tomorrow_அதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் கூகுள் தேடலில் அதிகளவில் தேடப்பட்டதில் `மெர்சல்’ முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதனைதொடர்ந்து லூனார் எக்ளிப்ஸ், ரக்ஷா பந்தன் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பதாக கூகுள் இந்தியா அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் `மெர்சல்’ படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment