31-ம் திகதிக்கு பின்னர் காலநிலையில் திடீர் மாற்றம்

ekuruvi-aiya8-X3

images-25நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 31-ம் திகதிக்கு பின்னர் மழை குறைவடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு , வடமத்திய ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழைத்தூறல் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மற்றைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் கேட்டுகொள்ளப்படுகின்றது.

Share This Post

Post Comment